Friday, June 29, 2012

நச்சு உணவு -Toxic Food - Poison On Our Plate?

1 comment:

  1. ஆன்மநேய அன்புடையீர் வந்தனம்.
    வள்ளலார் படம் அவரவர்கள் விருப்பத்திற்கு தகுந்தாற் போல். ஒவ்வொரு விதமாக வரைந்து வைத்து வெளியிடுகிறார்கள்.அதுவும் பரவாஇல்லை ,சாதி,சமயம்,மதம் அனைத்தும் சன்மார்க்கதிற்கு தடையாக உள்ளது என்பதை அனைவரும் தினமும் படித்துக் கொண்டு வருகிறோம்.,வள்ளலார் சாதி சமய மதங்களை கடந்தவர் ,அவருக்கு சைவ சின்னமான விபூதி பூசிய படங்கள் வெளியிடுவது எந்த விதத்தில் ஞாயம் ,--சன்மார்க்கம் போதிப்பவர்களே இப்படி செய்தால் ,ஏதும் அறியாத மக்கள் வள்ளலாரை சம்யவாதியாக பார்ப்பார்கள் இல்லையா ?--இப்படி எல்லாம் மக்கள் தன்னுடைய படத்தை வைத்து,வழிபடுவார்கள் என்பதால் தன்னுடைய படம் வேண்டாம் என்று கிழே போட்டு உடைத்தார் ,அதன் உண்மை என்ன ?தன்னை கடவுளாக பாவித்து உண்மைக் கடவுளாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவரை மறந்து விடுவார்கள் .என்பதால் சன்மார்க்கத் சங்கத்தவர் காலில் விழுந்து சொல்வதுபோல்.சொல்கிறார் {சன்மார்க்க சங்கத்திரீர் தாள் வணங்கி சாற்றுகிறேன்}இப்படி சொல்லியும் வள்ளலார் படத்திற்கு சமய சின்னமான விபூதி அடிப்பது அவசியமா ?இனிமேலாவது வள்ளலாரை சமயவாதியாக பார்க்காதீர்கள்,--வைணவ சமயத்தார் வள்ளலாரை விரும்புகிறார்கள் என்றால் அவர்கள் வள்ளலாருக்கு நாமம் போட்டால் என்ன செய்யப் போகிறீர்கள்.இவை எல்லாம் ஆன்மநேய அன்பர -திரு குப்புசாமி அய்யாவுக்கு தெரியாதா ?தயவு செய்து சிந்தியுங்கள்,முப்பது ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் வள்ளலார் படத்திற்கு சமய சின்னம் அணியாமல் படத்தை வெளியிட்டேன்.{அதனால் பல எதிர்ப்புகள் வந்தன } .அதுமுதல் மக்கள் புரிந்து கொண்டு எந்த சின்னமும் அணியாமல் வள்ளலார் படத்தை வெளியிட்டுக் கொண்டு உள்ளார்கள்,வள்ளலார் படம் எதுவாக இருந்தாலும் இனிமேல் சமய சின்னம் எதுவும் அணிய வேண்டாம் என்று உங்களை மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ,இந்த சின்ன பற்றை விட முடியாதவர்கள்,வள்ளலார் சொன்ன பற்றுகளை எப்படி விடுவார்கள்,பற்றிய பற்று அத்தனையும் விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே !என்கிறார் வள்ளலார் ,சிந்தியுங்கள்,செயல்படுங்கள்,

    ReplyDelete